search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சுடுதல்"

    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் குர்னிஹால் சிங் வெண்கலப்பதக்கத்தை வென்றார். #JuniorShooter #India ##ISSFWCH
    சாங்வான்:

    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் 19 வயதான குர்னிஹால் சிங் 46 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

    இத்தாலி வீரர் எலியா ஸ்ட்ருச்சியோலி தங்கப்பதக்கமும் (55 புள்ளி), அமெரிக்காவின் நிக் மாஸ்செட்டி வெள்ளிப்பதக்கமும் (54 புள்ளி) பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் குர்னிஹால் சிங், அனட்ஜீத்சிங் நருகா, ஆயுஷ் ருத்ராராஜூ ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 355 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

    செக்குடியரசு தங்கப்பதக்கமும் (356 புள்ளி), இத்தாலி வெண்கலப்பதக்கமும் (354 புள்ளி) வென்றது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 22 பதக்கங்களுடன் 4-வது இடம் வகிக்கிறது.  #JuniorShooter #India ##ISSFWCH
    ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் 16 வயதான மனு பாகெர் 593 புள்ளிகள் பெற்று இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். #ManuBhaker #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது.

    4-ம் நாளான இன்று காலை பெண்களுக்கான 25 மீட்டர் பிரிவில் தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் மனுபாகெர், ரகி சர்னோபட் பங்கேற்றனர். 16 வயதான மனு பாகெர் 593 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். இதேபோல் ரகி சர்னோபட் 580 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் இறுதிப் போட்டி இன்று மாலை நடக்கிறது.

    பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (நிலை 3) பிரிவில் இந்திய வீராங்கனைகள் அனுஜூம் (1159 புள்ளி) 9-வது இடமும், காயத்ரி நித்யானந்தம் (1148 புள்ளி) 17-வது இடமும பெற்று இறுதி சுற்று வாய்ப்பை இழந்தனர். #ManuBhaker #AsianGames2018
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் மூன்று நிலை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார். #AsianGames2018 #SanjeevRajput
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பல்வேறு பிரிவுகளில் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கமும், அபிஷேக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.



    இந்நிலையில், ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை துப்பாக்கி சுடும் போட்டியில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்தம் 452.7 புள்ளிகள் பெற்றார்.

    இப்பிரிவில் சீன வீரர் ஹுயி ஜிசெங் தங்கப்பதக்கமும் (453.3 புள்ளிகள்), ஜப்பான் வீரர் மத்சுமோட்டோ (441.4 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர். #AsianGames2018 #SanjeevRajput

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு வீரர் அபிஷேக் வெண்கலம் வென்றார். #AsianGames #SaurabhChaudhary
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

    இதற்கான தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி மொத்தம் 586 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்து, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேபோல் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா 580 புள்ளிகளுடன் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.



    அதன்பின்னர் இறுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட சவுரப்  (வயது 16) தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இப்போட்டியில் சவுரப் 240.7 புள்ளிகள் எடுத்து புதிய சாதனையும் படைத்துள்ளார். அபிஷேக் 219.3 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். ஜப்பான் வீரர் மத்சுடா டொமோயுகி 239.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SaurabhChaudhary
    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 11,300 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். 40 விளையாட்டுகளில் 465 பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது.

    இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 570 பேர் பங்கேற்று உள்ளனர். 36 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது. ஆசிய விளையாட்டில் இன்று முதல் போட்டிகள் தொடங்கியது.

    தொடக்க நாளில் துப்பாக்கி கூடுதலில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் அபுர்வி சண்டிலா-ரவிக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. அபுர்வி சண்டிலா-ரவிக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
    ×